search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர் எடப்பாடி"

    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என் மீது கூறிய குற்றச்சாட்டுக்கு கீதாஜீவன் எம்.எல்.ஏ. பதில் அளித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    30.3.2018 அன்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தூத்துக்குடி பகுதி மக்களின் எண்ணத்திற்கேற்ப, ‘ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும்’ என தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, நீதிமன்ற அனுமதியுடன், 4.4.2018 அன்று தி.மு.க.வின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற தூத்துக்குடி பகுதி கிராம மக்களை தொடர் போராட்டத்தின் 100-வது நாளை மிகவும் எழுச்சியுடன் மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

    இந்நிலையில், 20.5.2018 அன்று சப்-கலெக்டர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் போராட்டக் குழுவினருடன் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையில், போராட்டக் குழுவினர் முற்றுகை போராட்டத்தினை நடத்திட அனுமதி கேட்டு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

    தி.மு.க. சார்பில் 22.5.2018 அன்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் அறவழியில் பேரணியாக சென்றபோது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். அப்படி இருக்கையில் தி.மு.க. மீது முதலமைச்சர் பழி சுமத்துவது அவர் வகிக்கும் பதவிக்கு தரம் தாழ்ந்த குற்றச்சாட்டு. அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லாதது.

    தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முன்னெடுத்த முற்றுகைப் போராட்டத்தில் சாதி, மத, இன, கட்சி வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து, பெருந்திரளாக கலந்து கொண்டனர் என்பதுதான் உண்மை. அது ஒரு தன்னெழுச்சியான மக்களின் போராட்டமே தவிர தி.மு.க. உள்பட எந்த அரசியல் கட்சியும் தூண்டிவிட்டு நடத்திய போராட்டம் அல்ல.

    உண்மை நிலை இவ்வாறிருக்க சட்டசபையில் முதல்அமைச்சர் தூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் கீதாஜீவன், எம்.எல்.ஏ., என்று கூறுவது வடிகட்டிய பொய் மட்டுமல்ல தி.மு.க. மீது அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சுமத்தும் வாடிக்கையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகவே உள்ளது.

    தி.மு.க. மீது பழி சுமத்தும் போக்கில் துயரத்தில் மூழ்கி தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தும் முயற்சியில் முதலமைச்சரே இறங்கியிருப்பது வேதனைக்குரியது. துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லாமலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் அனுதாபம் தெரிவிக்க முடியாமலும் இருக்கும் முதலமைச்சர் என் மீது குற்றம் சாட்டுவது தனது தோல்வியை என் மீது போட்டு தப்பிக்க முயற்சியாகவே நான் பார்க்கிறேன்.

    காவல்துறை, உளவுத்துறை கையில் வைத்திருக்கும் முதல்அமைச்சர் நடந்த நிகழ்வுகள் முழுவதும் தெரிந்து கொள்ளவில்லை என்று நினைப்பதா, அல்லது தெரிந்து கொள்ளும் அளவிற்கு மாநில உளவுத்துறை முதல்அமைச்சருக்கு தகவல்களை கொடுப்பதில்லையா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

    எனவே முதலமைச்சரின் பொய்க்குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட விரும்புவது ஒன்றே ஒன்றுதான். அரசியலில் இருக்கும் என் மீது பழி போடுங்கள். அதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என் மீது பழி போடுவதாக நினைத்து உணர்வுடனும், தன்மானத்துடனும், தன்னெழுச்சியாக போராடிய என் மாவட்ட மக்களை தயவு செய்து கொச்சைப்படுத்தாதீர்கள் என்பதை மட்டும் முதலமைச்சருக்கு வேண்டுகோளாக வைக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் பழனிசாமி பதவி விலக கோரி மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மதுரை:

    தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    போலீசாரின் அராஜக செயலை கண்டித்து அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்டம், மறியல்கள் நடத்தி வருகின்றனர்.

    மதுரை பழங்காநத்தத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் ஆகியோர் பேசினர்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழுவை ரத்து செய்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்.

    இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் வறட்சி காலத்திலும் வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பவர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் துரைக்கண்ணு கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கர்நாடகா மாநிலத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் தமிழகத்துக்கு தண்ணீர் வருமா? என்பதற்கெல்லாம் யூகமாக பதில் கூற முடியாது. தமிழக முதல்வர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு இதுவரை எந்த வகையில் அழுத்தம் கொடுத்தாரோ, அதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அழுத்தம் கொடுப்பார்.

    மேலும் இது தொடர்பாக உச்சநீதிமன்றத்துக்கும் செல்வார். மத்தியஅரசு அமைத்துள்ள வரைவு திட்டத்தை ஏற்று கொண்டதா? இல்லையா? என்பதில் பிரச்சினை இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி தமிழகத்துக்குரிய 177.25 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் கொடுத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது தான் தமிழக முதல்வரின் கோரிக்கை. எங்களுடைய கோரிக்கையும், செயல்பாடும் அது தான்.

    குறுவை சாகுபடி கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தான் பொய்த்துள்ளது. அப்படியும் உணவு தானிய உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் சிறப்பிடம் பெற்றுள்ளது.

    தமிழகத்தில் கடந்த 144 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடந்தாண்டு வறட்சி ஏற்பட்டது. அந்த வறட்சியிலும் தமிழக முதல்வர் வளர்ச்சி காண்கின்ற வகையில் வளர்ச்சி திட்டங்களை செய்திருந்தார்.குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து இதுவரை விவாதிக்கவில்லை. குறுவை சாகுபடிக்கான கால அவகாசம் இருக்கிறது, பருவ மழை தொடங்க இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தண்ணீர் பெற இருக்கிறோம்.

    குடிமராமத்து பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்வது பற்றி ஆயத்த பணி நடைபெற்று வருகிறது. உரிய நிதியை ஒரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பார். அதன்மூலம் தூர்வாரும் பணிகள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×